Friday 18 November 2016

               தொடுவானம் பயிற்சி மையம் , திருவள்ளூர் Mobile no : 9994589446

மே 2016-ல் மத்திய பொதுப் பணித் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற இந்திய ஐபிஎஸ் உயரதிகாரி யார்?

பி.எஸ். பஸ்ஸி

மே 2016-ல் மத்திய நிதித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட, மூத்த ஐஏஎஸ் அதிகாரி யார்?
அசோக் லவாசா

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மே 31 அன்று அனுசரிக்கப்படும் தினம் எது?

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

2016-ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சி எத்தனை சதவீதமாக உயர்ந்தது?
7.9
மே 2016-ல் தமிழக சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக, 2-வது முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?

நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ்

மே 2016-ல் இளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் யார்?

அலாஸ்டர் குக்

மே 2016-ல் நவீன அடிமையாக உள்ளவர்களின் பட்டியலில், உலக அளவில் முதலிடம் பிடித்த நாடு எது?

இந்தியா

மே 2016-ல் மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயது, எந்த வயது வரை நீட்டிக்கப்பட்டது?

65

மே 2016-ல் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில், முதலிடம் பெற்ற இங்கிலாந்து வீரர் யார்?

ஜேம்ஸ் ஆண்டர்சன்

பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை வைத்து, காற்று மூலம் இயங்கும் நான்கு சக்கர வாகனத்தை தயாரித்தவர் யார்?

டேவிட் ராஜா

த ஸ்டார் ஆப் ஆடம் என்று பெயர் சூட்டப்பட்ட, உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

இலங்கை

மாநில அளவிலான சிலம்ப போட்டியில், தங்கம் வென்று சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி யார்?
பூஜா

மத்திய எரிசக்தித்துறை துணை இயக்குநர் யார்?
சுனித் கோயல்

2016-ல் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற, 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான எடை தூக்கும் போட்டியில், தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவன் யார்?
எசாக்கியா

நமது பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும், நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேட்டி தினம் ---------------- ஆம் நாள் கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 6

2014-ஆம் ஆண்டின் உலகத்தின் மிகப்பெரிய நன்கொடையாளர் எனற தகுதியை பெற்றுள்ள நாடு எது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மேற்கு ஆப்பிரிக்க நாடான ------------------ நாட்டில் அமைதியை நிலைநாட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை வீரர்களின் தைரியம் மற்றும் சேவையைப் பாராட்டி ஐ.நா. விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது?
லைபீரியா
  
2016-ல் ஸ்வீடனில் நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 211.2 புள்ளிகளுடன் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
அபூர்வி சண்டிலா

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது, அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான ------------------ இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது?
ஐ.என்.எஸ். கட்மட்

வணிக பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில், இடம் பெற்ற வைகிங் குளோபல் இன்வெஸ்ட்டார்ஸ் நிறுவன ஆலோசகர் யார்?
திவ்யா நித்திமி

சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு கழகத்தின் சார்பில், எடை தூக்கும் போட்டி எங்கு நடைபெற்றது?
ஜாம்ஷெட்பூர்

மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் யார்?
பி.சி.பெகரா

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலின்போது கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடலில் இருந்த குண்டுகளை அகற்றிய லெப்டினன்ட் கர்னல் ---------------- என்பவர் குண்டுவெடித்து பலியானார்?
நிரஞ்சன்குமார்

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹஷிம் ஆம்லா விலகுவதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைத்துவ பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டவர் யார்?
டிவில்லியர்ஸ்

மத்திய நிதித்துறை இணை இயக்குநர் யார்?
D)எம்.எம்.எச்.தேவா

மத்திய குடிநீர்த்துறை முதுநிலை ஆலோசகர் யார்?
ஜி.ஆர்.ஜார்க்கா


புனேவில் உள்ள மத்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவராக பொறுப்பேற்றவர் யார்?
கஜேந்திர சவுகான்

மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யும் நிடி ஆயோக் என்ற அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
அமிதாப் காந்த்

மின்சார சக்தியில் இயங்கும் குட்டி ஹெலிகாப்டர், உலகிலேயே முதல்முறையாக ஒரே ஒரு மனிதரை மட்டுமே சுமந்து செல்லும் வகையில், உருவாக்கப்பட்ட சீன நிறுவனம் எது?
இஹேங்

2016-ல் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலில், இந்திய அணி 3 இடங்கள் முன்னேறி ------------- ஆவது இடத்தை பிடித்தது?
163-வது

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் யார்?
எஸ்.ஆனந்த சந்திரபோஸ்

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பங்கேற்கும், துறைமுகங்களுக்கு இடையிலான தடகள போட்டி எங்கு நடைபெற்றது?
தூத்துக்குடி

சாகித்ய அகாதமி அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருது எது?
யுவ புரஸ்கார் விருது

ஜப்பான் நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன், கோல்ட் அண்ட் சில்வர் ஸ்டார் விருது பெற்ற இந்திய விஞ்ஞானி யார்?
சி.என்.ஆர். ராவ்

2015-ல் சென்னையில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் ஒற்றயைர் இறுதிப் போட்டியில், அல்ஜாஸ் பிடேனே தோற்கடித்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
வாவ்ரிங்கா

2015-ல் அண்டார்டிக் பெருங்கடலில் 1டிகிரி குளிர் நிலையில் 1.4 மைல் தூரத்தை 52 நிமிடங்களில் நீந்தி உலக சாதனை படைத்த நீச்சல் வீராங்கனை யார்?
பக்டி சர்மா

அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபர் பிராங்க் இஸ்லாமுக்கு வழங்கப்பட்ட கவுரமிக்க விருது எது?
மார்ட்டின் லூதர் கிங் விருது

18-வது தேசிய இணைய ஆட்சி முறை மாநாடு எங்கு நடைபெற்றது?
குஜராத்

2015-ல் பிரெஞ்ச் ஒபன் பாட்மிண்டன் போட்டி எங்கு நடைபெற்றது?
பாரீஸ்

2015-ல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்திய அணி எது?
மும்பை அணி

2015-ல் பெல்ஜியத்தில் நடந்த ஃபிலமிஷ் ஓபன் வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை யார்?
சி.ஏ.பவானி தேவி

2015-ல் வியட்நாமின் ஹாவ் சி மின் சிட்டியில் நடைபெற்ற ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், 7 - 5, 6 - 3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்ஸனை தோற்கடித்து, வெற்றி பெற்ற இந்தியர் யார்?
சாகேத் மைனேனி

டி.டி.கே., விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீணை கலைஞர் யார்?
கமலா அஸ்வத்தாமா

2015-ல் தேசிய அளவிலான உதை - குத்துச்சண்டைபோட்டியில் சப் - ஜூனியர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த நான்காம் வகுப்பு மாணவன் யார்?

ஹிஷாம்

 இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பில், மருத்துவ ஆராய்ச்சி சேவையைப் பாராட்டி, இங்கிலாந்து ராணியின் நைட்ஹூட் (சர்) பட்டம் ------------------ என்பவருக்கு அறிவிக்கப்பட்டது?
ஹர்பால்சிங் குமார்

மத்திய வேளாண்மை கழக கூடுதல் ஆணையர் யார்?
ஒய்.ஆர்.மீனா

வணிக பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட 20 துறைகளைச் சேர்ந்த 600 பேர் கொண்ட , 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில், எத்தனை இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்?
45

அமெரிக்காவின் மதிப்பு வாய்ந்த பீப்பிள் சாய்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை யார்?
ப்ரியங்கா சோப்ரா

இஸ்ரேலுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
பவன் கபூர்

தமிழகத்தில் ------------------ மாவட்டத்தில் ஒரே சமயத்தில் 483 பள்ளி மாணவியர், பானை மீது நின்று கொண்டே பாரதியாரின் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்?
சேலம்

சர்வதேச தடுப்பூசி மருந்து கூட்டமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி யார்?
சேத் பெர்க்லி

பெருநிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 2% சமூக நலனுக்காகச் செலவிட வேண்டும் என்பதை உலக நாடுகளில் சட்டமாக்கியுள்ள நாடு எது?
இந்தியா

உலகிலேயே முதல் முறையாக நடமாடும் குடிசை அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
மும்பை
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ---------------- என்பவர் ஜனவரி 2016 அன்று காலமானார்?
முஃப்தி முகம்மது சயீத்